Archive by category: இலங்கை செய்திகள்

Homeசெய்திகள்Archive by category: இலங்கை செய்திகள் (Page 2)

இணையவழி (Online) மதுபான விற்பனைக்கு அனுமதி இல்லை!!

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு இணையவழி (Online) மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இணையவழி மதுபான விற்பனை தொடர்பில் மதுவரித் திணைக்களம் முன்வைத்த யோசனைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியிருந்த நிலையில், குறித்த யோசனைக்கு கொவிட் தடுப்பு செயல்பாட்டு மையம் அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் அதிவீரியம் கொண்ட “டெல்டா”இலங்கையில்!!

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் அதிவீரியம் கொண்ட டெல்டா (பி.1.617.2) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐவர் கொழும்பு, தெமட்டகொடைப் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தனது ருவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மாவட்டத்தில் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் குறித்த ஐவரும் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் இலங்கையில் சமூகத்திலிருந்து …

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்தால்! முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!!

சமையல் எரிவாயு சிலிண்டர்களை வியாபார நிறுவனங்கள் பதுக்கி வைத்தால் அது தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு முன்வைக்க முடியும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் என லாப் மற்றும் லிட்ரோ கேஸ் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. லாப் நிறுவனம் 740 ரூபாவால் அதிகரிக்குமாறும், லிட்ரோ கேஸ் நிறுவனம் 670 ரூபாவால் விலையை அதிகரிக்குமாறும் கோரியுள்ளதாக எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழு உறுப்பினர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். …

எமது மக்களின் வயிற்றில் அடித்து அரசியல்வாதிகள் சிலர் மணல் கொள்ளையர்களுக்கு உதவி செய்கின்றனர் – சாணக்கியன் காட்டம்

எமது மக்களின் வயிற்றில் அடித்து அபிவிருத்தி செய்யும் அக்கறையற்ற அரசியல்வாதிகள் சிலர் மணல் கொள்ளையர்களுக்கு உதவி செய்கின்றனர் – சாணக்கியன் காட்டம் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் மணல் கொள்ளையர்களுக்கு சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருகின்றனர். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் மறந்து செயற்படுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர், கித்துள் பிரதேச சபை உறுப்பினர்களான வர்ணன், சிவானந்தன் …

வவுனியாவில் இளைஞர்களால் கசிப்பு பெரல் கைப்பற்றப்பட்டு அழிப்பு!!

வவுனியாவில் இளைஞர்களால் கசிப்பு பெரல் கைப்பற்றப்பட்டு அழிப்பு!! வவுனியா பாலமோட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்களால் கசிப்பு பெரல் ஒன்று கைப்பற்றபப்பட்டு அழிக்கப்ட்டுள்ளது. பாலமோட்டை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்குளம் கிராமத்தில் தொடர்ச்சியாக கசிப்பு விற்பனை நடைபெற்று வந்த நிலையில், பாலமோட்டை இளைஞர்கள் தங்கள் முயற்சியால் இன்று (யூன் 16) இரவு கசிப்பு பெரல் ஒன்றை கைப்பற்றி அழித்துள்ளனர். பனிச்சங்குளம் ஆத்துக்காணி என்ற பகுதியில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாரான நிலையில் வைக்கப்ட்டிருந்த ஒரு பெரல் ‘கோடா’ கிராமத்து இளைஞர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் கசிப்பு காய்ச்சுவதற்கு …

இணைய வழி மதுபான விநியோகம் ஒரு சூழ்ச்சி! அரச வைத்திய அதிகரிகள் சங்கம்!!

இணைய வழியாக வீடுகளுக்கு மதுபானங்களை விநியோகிக்கும் நடவடிக்கையானது, ஒரு சூழ்ச்சி என்பதனால் அதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மதுபான பயன்பாட்டினால் நாளொன்றிற்கு 63 பேர் வரை உயிரிழப்பதாகவும், கொரோனா மரணங்கள் நாளொன்றிற்கு சுமார் 60 வரை பதிவாவதாகவும் அந்த சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை உரிய முறை விநியோகிக்கும் …

திடீரென அரிசியின் விலை அதிகரிப்பு! “சதொச”வில் தேவையான அரிசி இல்லை என குற்றச்சாட்டு!!

அனைத்து அரிசி வகைகளினதும் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சுமத்துகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு காணப்பட்ட விலையை விடவும், சில அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, குறித்த அரிசி வகைகளின் விலைகள் 10 ரூபா முதல் 25 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும், சிவப்பு மற்றும் வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோகிராமின் விலை 120 ரூபா முதல் 128 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோகிராம் நாடு அரிசியின் விலை 125 ரூபா முதல் 135 ரூபா வரை …

வவுனியாவில் கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு நவீன கற்றல் நுட்பம்!

வவுனியாவில் கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு நவீன கற்றல் நுட்பத்தை விரிவு படுத்தும் நோக்கில், முன்னாள் வவுனியா தெற்கு கல்வி வலய, கோட்டக்கல்வி பணிப்பாளர் கலாநிதி எம்.பி.நடராஜ் மற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.விஜியகாந்தன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வவுனியா சமணங்குளம் அ.த.க.பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களின் கட்டாய தேவைக்கேற்ப சூம் (ZOOM) முறையிலான கற்றல், கற்பித்தல் செயல் முறையை கிராமப்புற பாடசாலைகளில் “இற்றைப்படுத்தல்” என்ற சிந்தனையை வலுப்படுத்தும் நோக்கில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் …

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு காரணமாக ஒரு அணிசேரா நாடாக சுதந்திர உலகில் முன்னேற முடிந்தது –  பிரதமர் 

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவு காரணமாக ஒரு அணிசேரா நாடாக சுதந்திர உலகில் முன்னேற முடிந்தது என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (15) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் எமது அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம். …

ரணிலை நோக்கி படையெடுக்கும் தொலைபேசி உறுப்பினர்கள்? எதிர்க்கட்சி தலைமை குழப்பத்தில்!!

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய 16 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேற்று இணைந்து கொண்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இதனை தெரிவித்துள்ளார். கம்பளை நகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து உறுப்பினர்களும், கண்டி மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 உறுப்பினர்களும், உடபலாத பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கம்பளை நகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த அனைவரும், ஐக்கிய …