Archive by category: இலங்கை செய்திகள்

Homeசெய்திகள்Archive by category: இலங்கை செய்திகள்

முகத்தை மலசலக்கூட கொமட்டிற்குள் அழுத்தி, அசுத்தமான நீரை தம்மீது திறந்து விடுவார்! பணிப்பெண் அதிர்ச்சி வாக்குமூலம்!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிலுள்ள மலசலக்கூடத்தை சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில், அவரது மனைவி தமது முகத்தை மலசலக்கூட கொமட்டிற்குள் அழுத்தி, அசுத்தமான நீரை தம்மீது திறந்து விடுவார் என பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய பெண்ணொருவரே, பொலிஸாருக்கு இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த 11 பெண்களில் ஒருவரே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார். ரிஷாட் பதியூதீனின் மனைவி மாத்திரமன்றி, அவரது …

இந்தியாவுக்கு பாதகமாக எதனையும் நான் செய்யமாட்டேன்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!!

நாட்டை விற்பதற்கு அல்லது இந்தியாவுக்கு பாதிப்பை உண்டாக்கும் வகையில் நான் ஒருபோதும் செயற்படமாட்டேன். என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (22) (வியாழக்கிழமை) நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, சீன நிறுவனத்திற்கு பூநகரி கெளதாரி முனையில் அட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்று, எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது …

ரிஷாட் பதியூதீனின் மனைவியிடம் சிறுமி மரணம் தொடர்பாக விசாரணை!!

பதினாறு வயது சிறுமியொருவர் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட மூன்று பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றது. பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினி கடந்த 3ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் திகதி உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மேலும் இரு பெண்களிடம் விசேட விசாரணைகள் ஆரம்பம்!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய நிலையில், தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் நேற்றைய தினம் 6 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார். சிறுமியின் தாயிடம் மேலதிக வாக்குமூலமொன்றும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். அத்துடன்இ சிறுமியின் சித்தப்பா, சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். இதேவேளை, குறித்த சிறுமிக்கு முன்னதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் …

இலங்கை நான்காவது கொவிட் அலை ஆரம்பம்? வைத்தியர்கள் எச்சரிக்கை!

இலங்கை நான்காவது கொவிட் அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கனிசமான அளவு இணங்காப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான்காவது அலையை நெருங்கிக் கொண்டிருப்பதை இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரிஷாட் வீட்டில் சிறுமி உயிரிழப்பு :− தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்! சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பொரள்ளை பொலிஸார், கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் தெரிவித்துள்ளனர். சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் M.N.ரஹுலின் கையெழுத்துடனான சட்ட வைத்திய அறிக்கையை, பொரள்ளை பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமி எவ்வித தாக்குதல்களுக்கும் இலக்காகி இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலில் தீ பரவியமையினால், உடலின் 72 வீதத்திற்கும் …

வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில்  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். அதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட  அனைவருக்கும் …

இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கான தொழில் வழிகாட்டல்!!

இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கான தொழில் வழிகாட்டல்!! இளைஞர்களின் திறன்களை ஊக்குவிப்பதற்கான தொழில் வழிகாட்டல் நிகழ்வு, 2021 ஆம் ஆண்டு திறன் அபிவிருத்தி தினத்தை முன்னிட்டு இலங்கை தொழில்பயிற்சி அதிகார சபையால் நேற்று யூலை 15 நடத்தப்பட்டது. வவுனியா கண்டி வீதி மூன்று முறிப்பில் அமைந்துள்ள இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் உதவி பணிப்பாளர் இரா.அகிலன் தலைமையில் நடைபெற்றது. இளைஞர்களின் திறன்களை ஊக்குவிப்பதற்கான தொனிப் பொருளாகக் கொண்ட இத்தினத்தில், தொழில் திறன் தொடர்பான விளக்கங்கள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உதவி பணிப்பாளர் …

வவுனியாவில் கண் மருத்தவமனை மற்றும் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஆளுநரால் திறந்து வைப்பு!!

வவுனியாவில் கண் மருத்தவமனை மற்றும் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஆளுநரால் திறந்து வைப்பு!! வவுனியாவில் கண் மருத்துவமனை மற்றும் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றை இன்று யூலை 15 வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எம்.எஸ். சாள்ஸ் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். நிகழ்வில் சிறப்ப விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன கலந்து கொண்டிருந்தார். வவுனியா மரக்காரம்பளையில் அமைந்துள்ள ஆனந்தி பால் பொருள் உற்பத்தி நிறுவனம் மற்றும் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள ஆனந்தி கண் மருத்துவமனை ஆகியன அந்நிறுவனத்தின் …

அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணிதிரளுங்கள்!! என்.பிரதீபன்.

நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும் அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணிதிரளுமாறு புதிய ஜனநாயக மாக்கிசலெனினிசக்கட்சியின் வன்னிமாவட்ட செயலாளர் என். பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….. கோட்டாபய மகிந்த தலைமையிலான அரசாங்கம் மக்கள் விரோதசெயற்பாடுகளை தொடர்ந்துகொண்டிருப்பதனை அண்மைக்காலங்களாக அவதானிக்கமுடிந்துள்ளது. உணவுப்பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் சடுதியானவிலை அதிகரிப்பு நாட்டுமக்களை, குறிப்பாக உழைக்கும்மக்களை வாட்டிவதைத்து வருகின்றது. அத்துடன் நாட்டின் முதுகெலும்பாகவுள்ள விவசாயிகளின்உரப்பிரச்சனைக்கு உரியமாற்றுத்தீர்வுகளைகாணாமல் பசளையை நிறுத்தியது விவசாயிகளின் தலையில் கல்லைப்போட்டுக்கொல்வதற்கு சமமானது. அத்துடன் கொத்தலாவல இராணுவப்பல்கலைகழக சட்டமூலமானது உயர்கல்வித்துறை இராணுவமயமாக்கப்படும் அபாயநிலமையை ஏற்ப்படுத்தியுள்ளது. …