HomeArticles posted bysenthee (Page 2)

நாளை மீண்டும் முடக்கப்படும் இலங்கை – இராணுவத்தளபதி அதிரடி!!

இலங்கையில் நாளை (யூன் 23) இரவு 10.00 மணி முதல் யூன் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை 30 மணித்தியாலங்களுக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (22) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மே 21 அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் ஜூன் 21 அன்று அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது. இந்த தளர்வு தொடர்ந்து மூன்று நாட்கள் நீடிக்கப்பட்டு, மீண்டும் 23ஆம் திகதி இரவு பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. …

லண்டனில் தியாகிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது!!

லண்டனில் தியாகிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது!! ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் EPRLF) ஸ்தாபகர் தோழர் பத்மநாபா மற்றும் பன்னிரு தோழர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளான யூன் 19ம் திகதியை உலகெங்கும் வாழும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள், உயிர் நீத்தவர்களின் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தியாகிகள் தினமாக நினைவு கூர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இவ்வருடம்  31வது தியாகிகள் தினமான யூன் 19ம் திகதி சனிக்கிழமை மெய்நிகர் வழியாக தியாகிகள் தினம் நினைவு கூரப்பட்டது. இதனை தொடர்ந்து லண்டன்  உள்ள …

திரைக்கு பின்னால் முதல்மரியாதை! ஓர் அனுபவ பகிர்வு!!

திரைக்கு_பின்னால் முதல்மரியாதை” “எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு…” என்று  பாரதிராஜாவிடம் பணம் வாங்க மறுத்த இளையராஜா ! முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் . இயக்குனர்இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் , நடிகர்திலகம் சிவாஜிகணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.! இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான  தேசியவிருதையும் , பாடலாசிரியருக்காக கவிஞர் வைரமுத்துக்கு …

நாட்டில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து ஆராயப்படும்!

நாட்டில் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழந்தை மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ தன்னார்வக் குழுவின் அறிக்கை உரிய நேரத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் கூறுகையில், பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு சுமார் நான்கு வாரங்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியையாவது வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக மூன்று சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தேவையான ஆலோசனைகளை வழங்க மருத்துவ …

நாடு திறக்கப்பட்டது! பொறுப்புடன் நடந்துக்கொள்ளாவிடின் அபாயம் அதிகரிக்கும் என எச்சரிக்கை!!

  நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (21) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதுடன், 23ம் திகதி இரவு 10 மணி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் 23ம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என இராணுவ …

நைஜீரியாவில் பாடசாலைக்குள் புகுந்து ஆயுதமேந்திய குழு ஆசியர்களை கடத்திச் சென்றுள்ளது!!

நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான கெபியில் உள்ள  பாடசாலைக்குள் புகுந்து ஆயுதமேந்திய குழு ஐந்து ஆசியர்களை கடத்திச் சென்றுள்ளது டன், போலீஸ் அதிகாரி ஒருவரை சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.  *(அன்மை காலமாக  நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து செல்வதுடன் , அவர்கள் கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை திருடுவதுடன், பாடசாலை மாணவர்களையும் கடத்தி செல்கின்றமை குறிப்பிடதக்கது.)

இணையவழி (Online) மதுபான விற்பனைக்கு அனுமதி இல்லை!!

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு இணையவழி (Online) மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இணையவழி மதுபான விற்பனை தொடர்பில் மதுவரித் திணைக்களம் முன்வைத்த யோசனைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியிருந்த நிலையில், குறித்த யோசனைக்கு கொவிட் தடுப்பு செயல்பாட்டு மையம் அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் அதிவீரியம் கொண்ட “டெல்டா”இலங்கையில்!!

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் அதிவீரியம் கொண்ட டெல்டா (பி.1.617.2) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐவர் கொழும்பு, தெமட்டகொடைப் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தனது ருவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மாவட்டத்தில் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் குறித்த ஐவரும் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் இலங்கையில் சமூகத்திலிருந்து …

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்தால்! முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!!

சமையல் எரிவாயு சிலிண்டர்களை வியாபார நிறுவனங்கள் பதுக்கி வைத்தால் அது தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு முன்வைக்க முடியும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் என லாப் மற்றும் லிட்ரோ கேஸ் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. லாப் நிறுவனம் 740 ரூபாவால் அதிகரிக்குமாறும், லிட்ரோ கேஸ் நிறுவனம் 670 ரூபாவால் விலையை அதிகரிக்குமாறும் கோரியுள்ளதாக எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழு உறுப்பினர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். …

எமது மக்களின் வயிற்றில் அடித்து அரசியல்வாதிகள் சிலர் மணல் கொள்ளையர்களுக்கு உதவி செய்கின்றனர் – சாணக்கியன் காட்டம்

எமது மக்களின் வயிற்றில் அடித்து அபிவிருத்தி செய்யும் அக்கறையற்ற அரசியல்வாதிகள் சிலர் மணல் கொள்ளையர்களுக்கு உதவி செய்கின்றனர் – சாணக்கியன் காட்டம் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் மணல் கொள்ளையர்களுக்கு சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருகின்றனர். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் மறந்து செயற்படுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர், கித்துள் பிரதேச சபை உறுப்பினர்களான வர்ணன், சிவானந்தன் …