HomeArticles posted bysenthee

எட்டு மாவட்டங்களில் அதிகரித்துவரும் கொவிட்! நுவரெலியா, யாழ்ப்பாணம் அபாய பட்டியலில்!!

நாட்டின் 8 மாவட்டங்களில் நேற்றைய தினம் தலா 100 கொவிட் தொற்றாளர்களுக்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. இதன்படி, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் நேற்று பதிவாகியிருந்தனர். கம்பஹா மாவட்டத்தில் 551 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 362 தொற்றாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 321 தொற்றாளர்களும் பதிவாகியிருந்தனர். அதனைத் தொடர்ந்து மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 1234 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன், மேல் மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நுவரெலியா …

அருள் பொழியும் ஈகைத் திருநாளில் உலக அமைதிக்காக அனைவரும் பிரார்த்திப்போமாக.

அருள் பொழியும் ஈகைத் திருநாளில் உலக அமைதிக்காக அனைவரும் பிரார்த்திப்போமாக. நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான். ********************************** எமது நாடும்  உலகமும் எதிர்நோக்குகின்ற ஒரு வித்தியாசமான காலமொன்றில் எம்மை வந்தடைந்துள்ள இந்த புனிதமிகு ஈதுல்பித்ர் நோன்பு பெருநாளை மிகவும் அமைதியான முறையில் ஆரவாரமின்றி வீடுகளில் இருந்து அனுஷ்டிக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் அவர் …

இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்ட மிகப்பெரும் கொவிட் வைத்தியசாலை!!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மிகப்பெரும் வைத்தியசாலையை உருவாக்கியுள்ளது இலங்கை இராணுவம், சீதுவ பகுதியில் மிகப்பெரும் கொவிட் 19 சிகிச்சை மருத்துவமனையை இராணுவம் உருவாக்கியுள்ளது. கொரோனா 3ம் அலை காரணமாக நாட்டில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் தற்போது இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது, அதனை நிவர்த்தி செய்வதற்காக மிகப்பெரும் வைத்தியசாலையை இலங்கை இராணுவம் உருவாக்கியுள்ளது. இது குறித்து இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகையில், 2500 படுக்கைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன,அடுத்த 3 அல்லது 4 நாட்களில் மேலும் 5000 படுக்கைகளை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அவசர …

மதுபானசாலைகளுக்கு புதிய நடைமுறைகளை அமுல்படுத்தியது மதுவரித் திணைக்களம்!!

மதுபானசாலைகள், மது அருந்தும் இடங்கள் மற்றும் மது அருந்தும் அனுமதியுடனான உணவகங்களை நடத்திச் செல்வதற்கான சுகாதார வழிகாட்டியொன்றை மதுவரித் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது. கோரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் குறித்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுபான விற்பனை நிலையங்களை உரிய நேரத்தில் மாத்திரம் திறக்க முடியும். வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் கள்ளு அருந்தும் இடங்கள் மறுஅறிவித்தல் வரை பூட்டு நட்சத்திர ஹோட்டல்களில் சுற்றுலா பயணிகளுக்காக இரவு 10 மணி வரை மாத்திரம் திறக்க …

கோவிட் 19 புதிய அலை – இளைஞர் யுவதிகளும் பாரிய அபாயத்தில்?

கோவிட் 19 புதிய அலை – இளைஞர் யுவதிகளும் பாரிய அபாயத்தில்? கோவிட் 19 வைரஸின் பல புதிய விகார வகைகள் உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நேரத்தில், பல நாடுகளில் இளைஞர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலும் கடந்த சில தினங்களாக அவதானிக்கப் பட்ட நிலையும் இதற்குச் சமமானதாகும். இதற்கும் மேலதிகமாக, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கணிசமான நோயாளிகள் கடுமையான சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதும் காணக் கிடைக்கின்றது. இந்த பின்னணியில், முன்னெப்போதையும் விட, …

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கர்ப்பிணி உயிரிழப்பு!!

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய, முதலாவது கர்ப்பணித் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கர்ப்பணித் பெண் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. ராகமை − பட்டுவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதான கர்ப்பிணி பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் 11 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது.

முதல் இடத்தை பெற்ற மாணவர்களின் விபரங்கள் இனி வெளியிடப்படாது! பரீட்சைகள் திணைக்களம்!

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை, கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் முதல் இடங்களை பெற்றவர்களின் பெயர் பட்டியல் இனி வரும் காலங்களில் வெளியிடப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மாணவர்களின் மனோநிலையை கருத்திற் கொண்டே தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டிலுள்ள மனோநிலை விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றே இந்த …

இலங்கையர்களுக்கு, மலேசியா பயணத்தடை!!

மலேசியாவிற்குள் இலங்கையர்கள் பிரவேசிக்க அந்த நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையிலேயே, அந்த நாட்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இதேவேளை, பங்களதேஷ், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் மலேசியாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மலேசியாவிற்குள் பிரவேசிக்க ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இலங்கை உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து தமது நாட்டிற்கு வருகைத் தர அந் நாடு தடை விதித்துள்ளது. மலேசியாவில் நாளொன்றில் சுமார் 3 ஆயிரத்து …

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் உத்தியோக பூர்வமாக கடமையேற்றார்!!

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் உத்தியோக பூர்வமாக கடமையேற்றார்!! வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளராக நியமனம் பெற்ற திருமதி.சுரேந்திரன் அன்னமலர் உத்தியோக பூர்வமாக இன்று (5) தனது கடமைகளை பொறுப்பேற்றார். வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள தெற்கு வலயக்கல்வி அலுவலகத்தில் இன்று மாலை உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்று கையொப்பமிட்டார். வவுனியா தெற்கு வலயத்தின் கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய மு.இராதாகிருஸ்ணன் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், வவுனியா வடக்கு வலயத்தில் பணியாற்றி வந்த திருமதி.எஸ்.அன்னமலர் வவுனியா தெற்கு வலயத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு …

இலங்கையில் கொவிட் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது! அமைச்சர் ரமேஷ் பத்திரண!!

இலங்கையில் கொவிட் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதை அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரண ஏற்றுக்கொண்டார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். கொவிட் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிப்பதற்காக நிதியை பெற்றுக்கொள்ளும் வகையில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சியினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அவர் கூறுகின்றார். கடந்த காலங்களில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகிய நிலையில்இ நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் கட்டில்களுக்கான தட்டுப்பாடு நிலவியதாகவும் அவர் தெரிவித்தார். வைத்தியசாலைகளில் தற்போது …