Homeசெய்திகள்இலங்கை செய்திகள்மீண்டும் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்??

மீண்டும் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்??

கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் சந்தையில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச்.வேகப்பிடி கருத்து தெரிவிக்கையில்,

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு என்பனவற்றின் காரணமாக நாட்டில் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேவேளை வணிக வங்கிகளினால் எரிவாயுயை பெற்றுக் கொள்வதற்கான கடன் கடிதங்கள் வழங்கப்படாமையினாலே தற்போது எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment