Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் காடழிப்பு கண்டு கொள்ளாத வனத்துறை!! அதிகாரிகள் உடந்தையா??

வவுனியாவில் காடழிப்பு கண்டு கொள்ளாத வனத்துறை!! அதிகாரிகள் உடந்தையா??

வவுனியா பூவரசங்குளத்தில் சில நபர்களால் காடு வெட்டி அழிக்கப்பட்டுக் கொண்டிக்கும் நிலையில், வனத்துறையினர் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டனர்.

பூவரசங்குளம் அண்டிய வடக்கு பகுதியில் குளத்துக்கு சொந்தமான நீரேந்து பகுதிகள், மற்றும் காட்டு பகுதியை சேர்ந்த நிலப்பரப்பில் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளது.

பூவரசங்குளம் அண்டிய பகுதியில் அறுவது ஏக்கருக்கு அதிகமான காடுகள் அழிக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆறு மாத காலமாக இக்காடழிப்பு இடம்பெற்று வருவதாக தெரிவித்த பிரதேச வாசிகள், இது தொடர்பாக வனத்துறையினர் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என என கவலை வெளியிட்டனர்.

அத்துடன் இக்காடழிப்பு மற்றும் குளம் சார்ந்த நிலங்கள் அபகரிப்பு தொடர்பாக, வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா கமநல சேவைகள் திணைக்களம், பம்பைமடு கமநல திணைக்களம் அதிகாரிகள் கூட இவைகளை கண்டுகொள்ளவில்லை என கிராம மக்கள் சுட்டிக்காட்டினர்.

பூவரசங்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியில் சட்டவிரோதமாக வேலிகள் அமைக்கப்பட்டு பல ஏக்கர் காணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த காடழிப்பு நடைபெற்று நிலங்கள் உழவு இயந்திரங்கள் மூலம் உழப்பட்டுள்ளதுடன், கோரோனா முடக்க காலத்தை பயன்படுத்தி காணி ஆக்கிரமிப்பாளர்கள் காட்டு மரங்களை வெட்டி கடத்துவதுடன், மரங்களுக்கு தீயிட்டு அழித்து வருகின்றனர்.

மக்கள் வாழும் கிராமங்களில் சென்று இது வனப்பகுதிக்கு சொந்தமாது என தெரிவித்து குயிருப்பகுதிகளில் எல்லைக்கல்லிடும் வனத்துறையினர், இப்பெரிய காடழிப்பை கண்டுகொள்ளாதது ஏன் என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பூவரசங்குளம் அண்டிய பகுதியில் காடழிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு, வேற்று பிரதேச நபர்களினால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

Leave a comment