Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதுத் தொடர்பில் கரிசனை!!

இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதுத் தொடர்பில் கரிசனை!!

தரம் 7 தொடக்கம் 13 வரை கல்வி கற்கும் 2 மில்லியன் மாணவர்களுக்கு, கொவிட் தடுப்பூசி வழங்குவதுத் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று(09) இடம்பெற்ற நிகழ்தகை கலந்துரையாடலிலேயே இதனை தெரிவித்தார்

கொரானா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனம், மற்றுமொரு சர்வதேச நிறுவனம் என்பன இணைந்து மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதுத் தொடர்பில் பரிந்துரைத்துள்ளன.

ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகள் திறக்கப்படும்போது அனைத்து மாணவர்களும் கொவிட் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

Leave a comment