Homeசெய்திகள்இலங்கை செய்திகள்பொலநறுவையில் அரசுடமையாக்கப்பட்டது 1000 மெற்றிக் தொன் அரிசி!!

பொலநறுவையில் அரசுடமையாக்கப்பட்டது 1000 மெற்றிக் தொன் அரிசி!!

பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பாரிய அரிசி ஆலைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1000 மெற்றிக் தொன் அரிசியை, அரசுடமையாக்கி, சதொச கூட்டுறவு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தைக்கு விநியோகிக்காமல், பதுக்கி வைத்திருந்த அரிசியை மீட்கும் வகையில், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் தலைமையில் இன்றைய தினம் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரலிய, நிபுன மற்றும் ரத்ன ஆகிய பிரபல அரிசி ஆலைகளே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அரிசி ஆலைகளிலிருந்த பெருந்தொகையான அரிசி, தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

Leave a comment