Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் காடையர்கள் கொலை அச்சுறுத்தல்! போலிசில் முறைப்பாடு!!

வவுனியாவில் காடையர்கள் கொலை அச்சுறுத்தல்! போலிசில் முறைப்பாடு!!

வவுனியா சோபாலபுளியங்குளம் பகுதியை சேர்ந்த எஸ். நவராசா என்பவருக்கு அப்பகுதியை சேர்ந்த காடையர்கள் சிலரால் இன்று (ஓகஸ்ட் 07) கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சோபாலபுளியங்கும் கிராமத்தில் சமூக செயற்பாடுகளில் அக்கறைகாட்டிவரும் குறித்த நபருக்கு எதிராக சில அரசியல் கட்சிகளை சார்ந்த காடையர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு வேறு பிரதேசங்களிலிருந்து குடியேற்றங்கள் செய்யப்பட்டதுடன், அங்கு குடியிருக்கும் தமிழ் மக்களை மறைமுகமாக அச்சுறுத்தி வெளியேற்றும் நடவடிக்கையில் சில அரசியல் கட்சியை சேர்ந்த காடையர் கூட்டம் இயங்கி வருவதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக தமிழ் மக்களின் வயல் நிலங்கள் மற்றும் குளத்துக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தன்னை கொலை செய்ய போவதாக அப்பிரதேசத்தை சேர்ந்த மத அடிப்படைவாத காடையர்கள் அச்சுறுத்தியதாக, வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று இன்று பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நில அபகரிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டு வந்த காரணத்தினால் குறித்த பகுதியை சேர்ந்த காடையர்கள் 14-04-2020 அன்று எனது மோட்டார் சைக்கிளை எரியூட்டி என்னை அச்சுறுத்தியிருந்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சோபால புளியங்குளம் கிராமத்தில் 98 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நில அபகரிப்பு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதுடன் இது தொடர்பாக வவுனியா மாவட்ட அதிகாரிகள் நடவடிக்;கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

 

 

Leave a comment