Homeசெய்திகள்இலங்கை செய்திகள்30 வயதுக்கு குறைவான ஐவர் அடங்களாக 202 பேர் உயிரிழப்பு

30 வயதுக்கு குறைவான ஐவர் அடங்களாக 202 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,806ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, நேற்றைய தினம் (02) கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 202 பேர் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்களும், 89 பெண்களும் அடங்குவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், 30 வயதுக்கு குறைவான 2 ஆண்களும், 3 பெண்களுமான 05 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.

Leave a comment