Homeசெய்திகள்இலங்கை செய்திகள்தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்டது ஏன்? இராணுவ தளபதி விளக்கம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்டது ஏன்? இராணுவ தளபதி விளக்கம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 6ம் திகதி தளர்த்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே, அதனை நீடிக்க தீர்மானித்ததாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

6ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 13ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேலும் ஒரு வார காலத்திற்கு பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என வைத்தியர்கள், கொவிட் – 19 தடுப்புக்கான கூட்டத்தில் இன்றைய தினம் தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

வைத்தியர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கருத்திற் கொண்டே, ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

Leave a comment