Homeசெய்திகள்இலங்கை செய்திகள்டெல்டா 100 வீதம் பரவும் மாவட்டம் வெளியானது!!

டெல்டா 100 வீதம் பரவும் மாவட்டம் வெளியானது!!

இலங்கையில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 292ஆக அதிகரித்துள்ளது.

டெல்டா திரிபு கொழும்பில் வேகமாக பரவி வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளதாக ஶ்ரீ  ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர  குறிப்பிடுகின்றார்.

கொழும்பு மாவட்டத்திற்கு வெளியிலும், டெல்டா திரிபு பரவ ஆரம்பித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதேவேளை, கொழும்பில் நூற்றுக்கு 100 வீதம் டெல்டா வைரஸ் உள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், சூப்பர் டெல்டா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீ  ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர அச்சம் வெளியிடுகின்றார்.

Leave a comment