Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை!!

இலங்கையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை!!

நாட்டில் எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் தினங்களில் மிகவும் வேகமாக முன்னெடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் சர்வதேச மட்டத்தில் பாராட்டப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

Leave a comment