Homeசெய்திகள்உலக செய்திகள்BREAKING NEWS -ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்திற்கு அருகில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம்!!

BREAKING NEWS -ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்திற்கு அருகில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம்!!

ஆப்கானிஸ்தான் − காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பாரிய வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், காபூலை விட்டு வெளியேற பெருமளவானோர் விமான நிலையத்தில் கடந்த பல நாட்களாக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே, பாரிய வெடிப்புக்கள் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. அது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என தெரிய வந்துள்ளதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அங்கு தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்த பிறகு துப்பாக்கிச்சண்டை நடக்கும் சத்தத்தைக் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நடந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 11 பேர் பலியாகியிருக்கலாம் என்று தாலிபன் தெரிவித்துள்ளது.

சில வெளிநாட்டினர், பெண்கள், குழந்தைகள், தாலிபன் போராளிகள் சிலர் காயம் அடைந்துள்ளதாக தாலிபன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment