Homeசெய்திகள்இலங்கை செய்திகள்மூன்று வகையான தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட எவரும் உயிரிழக்கவில்லை! ஆய்வில் தகவல்!!

மூன்று வகையான தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட எவரும் உயிரிழக்கவில்லை! ஆய்வில் தகவல்!!

சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை விடவும், செலுத்தப்படாதவர்களின் இறப்பு விகிதம் அதிகம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

இதன்படி, சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களை விடவும், செலுத்தப்படாதவர்கள் உயிரிழப்பது 8.1 வீதத்தினால் அதிகம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் தளத்தில் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபைசர், அஸ்ட்ரா-சேனிகா கொவிசீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வீ ஆகிய தடுப்பூசிகளை பெற்ற 50 வீதத்திற்கு அதிகமான எவரும் இதுவரை உயிரிழக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

Leave a comment