Homeசெய்திகள்இலங்கை செய்திகள்முடக்க காலத்தில் 2000 பெறாதவர்கள் முறையீடு செய்யலாம்!!

முடக்க காலத்தில் 2000 பெறாதவர்கள் முறையீடு செய்யலாம்!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் 2,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

அவ்வாறு நிவாரணக் கொடுப்பனவு பெறாதவர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நிவாரணக் கொடுப்பனவு தொகையினை உரிய காலப் பகுதியில் பெறாதவர்கள் பிரதேச செயலாளரிடம் முறையீடுகளைச் சமர்ப்பிக்கலாம்.

இதேவேளை 2,000 ரூபா கொடுப்பனவை உடனடியாக ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Leave a comment