Homeசெய்திகள்இலங்கை செய்திகள்மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற மக்களை திருப்பி அனுப்பிய இராணுவத்தினர்!!

மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற மக்களை திருப்பி அனுப்பிய இராணுவத்தினர்!!

மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற மக்களை திருப்பி அனுப்பிய இராணுவத்தினர்!!

மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளிகளை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இன்று (ஓகஸ்ட் 25) இடம்பெற்றுள்ளது.

அடம்பன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்கள் நோய் காரணமாக மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது, பெரியமடு பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் அவர்களை வைத்தியசாலைக்கு செல்ல அனுமதிக்காது திருப்பி அனுப்பியுள்ளனர்.

பெரியமடு பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடியில், அடம்பன் பகுதியிலிருந்து வியாபார நோக்கத்திற்காக வரும் வியாபாரிகளை மன்னார் செல்ல அனுமதிக்கும் இராணுவத்தினர், நோயாளிகளை வைத்தியசாலை செல்ல அனுமதிக்காமையானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்வம் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், எங்களுக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான நோய் காரணமாக பெரியமடு பகுதியில் மருந்து பெற்றுக்கொண்ட நிலையிலும் நோய்க்கு நிவாரணம் கிடைக்காத காரணத்தினால், கிராம உத்தியோகத்தர் ஊடாக அனுமதி கடிதம் பெற்று மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது, நோயாளியாகிய மக்களை பெரியமடு பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடியில் தடுத்து நிறுத்திய இராணுவத்தினர், நோயாளிகளாகிய எங்களுக்கு மன்னார் வைத்தியசாலைக்கு செல்ல அனுமதி மறுத்தனர். நாங்கள் எமது நிலைமையை எடுத்து சொல்லி கிராம உத்தியோகத்தரின் அனுமதி கடிதத்தை காட்டிய போதும் எம்மை இராணுவத்தினர் வைத்தியசாலை செல்ல அனுமதிக்கவில்லை அதன் காரணமாக நாங்கள் மீண்டும் வீட்டிற்கே திரும்பியிருந்தோம் என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டனர்.

Leave a comment