Homeசெய்திகள்இலங்கை செய்திகள்அதிபர் – ஆசிரியர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வுக்கு! பரிந்துரை!!

அதிபர் – ஆசிரியர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வுக்கு! பரிந்துரை!!

அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக் குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை முன்வைத்துள்ளது.

இந்த நியாயமான தீர்வுகளை எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறித்து, அந்த அறிவிக்கை கட்டம் கட்டமாக அமுல்படுத்த வேண்டும் என அந்த குழுவினர் பரிந்துரை முன்வைத்துள்ளனர்.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து அமைச்சர்களான டளஸ் அழகபெரும, மஹிந்த அமரவீர, விமல் வீரவங்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் தலைமையிலான அமைச்சரவை இணைக்குழுவினால் ஆராயப்பட்டிருந்தது.

இவ்வாறு அமைச்சரவை இணைக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் பரவலினால் நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொண்டு, தமது பரிந்துரைகளை கட்டம் கட்டமான நடைமுறைப்படுத்த வேண்டும் என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்வி நிர்வாக சேவை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வகையான சேவையாக பிரகடனப்படுத்துமாறும் அந்த குழுவினர் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நிறைவு செய்து, அதனை வர்த்தமானி ஊடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்து குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

Leave a comment