Homeசெய்திகள்இலங்கை செய்திகள்ஹிஷாலினி வழக்கில் சந்தேகநபராக ரிசாட் பெயரிடப்பட்டார்!

ஹிஷாலினி வழக்கில் சந்தேகநபராக ரிசாட் பெயரிடப்பட்டார்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் 5ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்திருந்ததை அடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் ரிஷாட்டின் மனைவி, மைத்துனர் உள்ளிட்ட நால்வர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment