Homeசெய்திகள்இலங்கை செய்திகள்கொழும்பில் 150 வருடங்கள் பழைமை வாய்ந்த கட்டிடம் இடிப்பு!!

கொழும்பில் 150 வருடங்கள் பழைமை வாய்ந்த கட்டிடம் இடிப்பு!!

கொழும்பில் சுமார் 150 வருட பழைமை வாய்ந்த கட்டிடமொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை உடைந்துள்ளது.

தமது எதிர்ப்புக்கு மத்தியில் இந்த கட்டிடம் இடிக்கப்படுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அநுர மனதுங்க தெரிவிக்கின்றார்.

இந்த கட்டிடத்தை உடைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடுத்து, குத்தகை அடிப்படையில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 150 வருட பழைமை வாய்ந்ததாக கூறப்படும் இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி, கடந்த ஜுலை மாதம் உடைந்து வீழ்ந்துள்ளது.

1940ம் ஆண்டு 40ம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், குறித்த கட்டிடம், வரலாற்று சிறப்புமிக்கது என அடையாளப்படுத்தப்படாமையினால், கட்டிடம் உடைக்கப்படுகின்றமையை சவாலுக்கு உட்படுத்தி, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்க முடியாது என தொல்பொருள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், இந்த கட்டிடம் வரலாற்று சிறப்புமிக்கது என அடையாளப்படுத்தப்படாத போதிலும், இதுவரை அடையாளப்படுத்தப்படாத வரலாற்று சிறப்புமிக்க பல இவ்வாறான கட்டிடங்கள் உள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவிக்கின்றது..

அவ்வாறான கட்டிடங்களை விரைவில் அடையாளப்படுத்தி, அவற்றை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் கூறியுள்ளது.

இந்தியாவின் டாடா வீடமைப்பு அபிவிருத்தி நிறுவனத்திற்கு, இந்த கட்டிடம் அமைந்துள்ள காணி வழங்கப்படவுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக நியூஸ் பெஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a comment