Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இராணுவத் தளபதியின் மற்றுமோர் அறிவிப்பு வெளியானது!!

இராணுவத் தளபதியின் மற்றுமோர் அறிவிப்பு வெளியானது!!

நாட்டில் இதுவரை எந்தவொரு கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியும் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக தமது தகவல்களை தெரிவிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

தடுப்பூசி போடப்படும் மையத்துக்கு வர முடியாதவர்களின் வீட்டுக்கு வந்து தடுப்பூசி போடத் தயாராக உள்ளதாகவும், இலங்கையில் கொவிட் தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

Leave a comment