Homeசெய்திகள்இலங்கை செய்திகள்சட்டவிரோத ஒன்றுகூடலால் கொரோனா தொற்று அதிகரிக்கும் சாத்தியம்!

சட்டவிரோத ஒன்றுகூடலால் கொரோனா தொற்று அதிகரிக்கும் சாத்தியம்!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஏற்பாடு செய்யப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளால் சமூகத்திலிருந்து பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார விதிமுறைகள் மேலும் மீறப்பட்டால், எதிர்காலத்தில் தொற்றுநோய் மோசமடைவதைத் தடுப்பது கடினமான காரியம் என்று சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர். ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும்போது பொது மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment