Homeசெய்திகள்இலங்கை செய்திகள்கொவிட் தொற்று சிறுவர்கள் மத்தியில் பரவல் அதிகரிப்பு!

கொவிட் தொற்று சிறுவர்கள் மத்தியில் பரவல் அதிகரிப்பு!

சிறுவர்கள் மத்தியில் கொவிட் தொற்று பரவல் மேலும் அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜே.விஜேசூரியா தெரிவித்தார்.

கொவிட் தொற்று காரணமாக நாளாந்தம் சுமார் 25 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பெற்றோர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டாலும் கூட, தமது குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a comment