Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் நாலாயிரத்தை அண்மித்த கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் நாலாயிரத்தை அண்மித்த கொரோனா தொற்றாளர்கள்!

நாட்டில் இன்றைய தினம் 3 ஆயிரத்து 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனால், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை, 3 இலட்சத்து 73 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 6 ஆயிரத்து 604 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து, மேலும் 2 ஆயிரத்து 186 பேர், பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால், கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3 இலட்சத்து 18 ஆயிரத்து 714 ஆக அதிகரித்துள்ளது.

அதனால், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை தவிர்த்து, தற்பொழுது, 47 ஆயிரத்து 834 தொற்றாளர்கள், வைத்தியசாலைகள் மற்றும் கொரோனா சிகிச்சை நிலையங்களில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a comment