Homeசெய்திகள்இலங்கை செய்திகள்சுகாதார நடைமுறைகளை மீறி சமூர்த்தி கொடுப்பனவு! வவுனியாவில் சம்பவம்!!

சுகாதார நடைமுறைகளை மீறி சமூர்த்தி கொடுப்பனவு! வவுனியாவில் சம்பவம்!!

சுகாதார நடைமுறைகளை மீறி சமூர்த்தி கொடுப்பனவு! வவுனியாவில் சம்பவம்!!

வவுனியா 217சி, பழைய சாலம்பைக்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு நேற்று (17) சமூர்த்தி கொடுப்பனவு வழங்கும் போது சுகாதார நடைமுறைகள் பேணப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பழைய சாலம்பைக்குளம் கிராம சேவகர் பிரிவானது இயங்கராவூர், சோபாலபுளியங்குளம், கற்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.

இக்கிராமங்களுக்கான சமூர்த்தி கொடுப்பனவுகள், சகல வசதிகளுடன் பழைய சாலம்பைக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுநோக்கு மண்டபத்தில் வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய சாளம்பைக்குளம் பகுதிக்கு மக்களை வரவளைத்து சமூர்த்தி கொடுப்பனவுகள் சுகாதார நடைமுறைகளை பேணாது வழங்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய நடைமுறையால், சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்றாமலும், மற்றும் கழிவறைகள் அற்ற நிலையில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கினர்.

நாடு கொரோனா காரணமாக பாரிய தொற்று அபாயத்தை எதிர்கொண்டுள்ள இந்நிலையில், அதிகாரிகளின் இவ்வாறான பொறுப்பற்ற நடவடிக்கைகள் சமூகத்தை பாரிய சுகாதார அழிவிற்கு இட்டுச்செல்லும், அத்துடன் குறித்த கிராமத்தில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களுக்கு வியாபார நோக்கத்திற்காக சென்று வருபவர்கள் என கிராம மக்கள் குறிப்பிட்டனர்.
கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் மக்களை கூட்டமாக ஒன்று சேர்க்காமல் ஒவ்வொரு கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள பொதுநோக்கு மண்டபங்களில் வைத்து மக்களுக்கான சேவைகளை வழங்க முன்வரவேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

Leave a comment