Homeசெய்திகள்இலங்கை செய்திகள்முறைப்பாடு செய்த பெண் மற்றும் சிறுமியை கைது செய்த பொலிசார்!! மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்!!

முறைப்பாடு செய்த பெண் மற்றும் சிறுமியை கைது செய்த பொலிசார்!! மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்!!

முறைப்பாடு செய்த பெண் மற்றும் சிறுமியை கைது செய்த பொலிசார்!! மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்!!
மன்னார் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பெண் மற்றும் அவருடைய மகள் ஆகியோரை இன்று (ஓகஸ்ட் 16) இரவு 10.00 மணிக்கு கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,

மன்னார் அடம்பன் பகுதியில் 13 வயது சிறுமியை நபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோக முயற்சி மேற்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்ற சிறுமியின் தாயாரிடம் முறைப்பாட்டை பெற்றுக்கொள்ளாத பொலிசார் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

குறித்த பெண் தனது மகளுக்கு ஏற்பட்ட துஸ்பிரயோக முயற்சி தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டதுடன், வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திலும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அத்துடன் சிறுவர் நன்நடத்தை அதிகார சபையிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று இரவு 10.00 மணிக்கு குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அடம்பன் பொலிசார் பாதிக்கப்பட்ட சிறுமியையும், தாயாரையும் கைது செய்து அடம்பன் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
குற்றம் புரிந்தவரை கைது செய்யாத அடம்பன் பொலிசார் பாதிக்கப்பட்ட சிறுமியையும், தாயாரையும் கைது செய்துள்ளமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடம்பன் பொலிசாரின் அத்துமீறல் செயற்பாடு தொடர்பாக உடனடியாகவே வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள குறித்த பெண் இறுதி யுத்தத்தில் தனது கணவனை பறிகொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment