Homeசெய்திகள்இலங்கை செய்திகள்தமிழ் மக்களிடம் நூதன முறையில் பணம் திருட்டு! பொறுப்பு கூறாத டயலொக் நிறுவனம்!!

தமிழ் மக்களிடம் நூதன முறையில் பணம் திருட்டு! பொறுப்பு கூறாத டயலொக் நிறுவனம்!!

 

வவுனியாவில் டயலொக் நிறுவனத்தின் பெயரை பாவித்து 25 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்த சம்பவம் ஒன்று, இன்று (ஓகஸ்ட்16) இடம் பெற்றுள்ளது.

யுத்தத்தில் கணவனை இழந்து ஒரு பிள்ளையுடன் வாழ்ந்து வரும் விதைவைத்தாய் ஒருவரே எமாற்றப்பட்டு தனது பணத்தை பறி கொடுத்துள்ளார்.

இது குறித்து வவுனியா டயலொக் நிறுவனத்தில் பணத்தை பறிகொடுத்த பெண் முறைப்பாடு செய்த போதிலும் நிறுவனம் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட பெண் விசனம் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் டயலொக் நிறுவனமானது தனது சேவையூடாக பல கோடி ரூபாக்களை இலாபமாக பெற்றுவரும் நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு முறையான பாதுகாப்பை வழங்க தவறியுள்ளது என பாதிக்கப்ட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

டயலொக் நிறுவனத்தின் இலக்கமாகிய 0741188986, 07685555065, 0762586660 மற்றும் 0774799175 ஆகிய இலக்கங்களிலிருந்து குறித்த பெண்ணிடம் அழைப்பை ஏற்படுத்தி, டயலொக் நிறுவனத்தின் உயரதிகாரி என தெரிவித்து, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசிடமிருந்து பணம் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றப்பட்டுள்ளார்.
இலங்கை வங்கி மற்றும் டயலொக் நிறுவனங்களின் பெயர்களை பாவித்து தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
அத்துடன் வவுனியாவில் இயங்கும் ஈசி காஸ் சேவை நடைபெறும் வியாபார நிலையங்களினூடாக அதிகமாக இம்மோசடி இடம்பெற்று வருகின்றது.

வவுனியா மற்றும் வடக்கு மாகாணத்தில் இவ்வாறான மோசடி ஊடாக பலர் தங்கள் பணங்களை இழந்துள்ளனர். இவ்வாறு டயலொக் நிறுவனத்தின் பெயரை பாவித்து மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கையை டயலொக் நிறுவனம் வேடிக்கை பார்ப்பதாகவே பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அப்பாவி மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வாறான மோசடி நடவடிக்கைக்கு பொலிசாரும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை வெளியிட்டனர்.

 

 

Leave a comment