Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் வயோதிப பெண்ணை காணியிலிருந்து வெளியேறுமாறு காடையர் குழு கொலை அச்சுறுத்தல்!!

வவுனியாவில் வயோதிப பெண்ணை காணியிலிருந்து வெளியேறுமாறு காடையர் குழு கொலை அச்சுறுத்தல்!!

வவுனியாவில் வயோதிப பெண்ணை காணியிலிருந்து வெளியேறுமாறு காடையர் குழு கொலை அச்சுறுத்தல்!!

வவுனியா சோபாலபுளியங்குளம் ஏழாம் கட்டை கிராமத்தில் வசித்து வரும் க.லட்சுமி என்ற வயோதிகப் பெண்னை அவரது காணியிலிருந்து வெளியேறுமாறு 15 பேரடங்கிய காடையர் கும்பல் ஒன்று நேற்று (யூலை 14) கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

குறித்த காடையர் கும்பல் புதிய சாளம்பைக்குளம் பகுதியிலிருந்து, வந்து தனியாக வசித்து வரும் குறித்த வயோதிக தாயாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

சோபாலபுளியங்குளம் கிராமத்தில் வசித்துவரும் வயோதிக தாயாரின் காணியின் எல்லை கற்களை தோண்டியெடுத்து விசியெறிந்து உடனடியாக காணியிலிருந்து வெளியேறுமாறு கொலையச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
கடந்த காலத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் காடையர்களின் அச்சுறுத்தல் தொடர்பாக பொலிசார், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கவலை வெளியிட்டனர்.

சோபாலபுளியங்குளம் கிராமத்தில் 95 தமிழ் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், குறித்த காடையர் கும்பலால் தொடர்ச்சியாக சோபாலபுளியங்குளம் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கு தடை போடும் செயற்பாட்டையும் குறித்த காடையர் கும்பல் மேற்கொண்டு வருவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன

 

 

 

 

 

 

Leave a comment