Homeசெய்திகள்இலங்கை செய்திகள்நாட்டில் உச்சத்தைத் தொட்டது கொரோனா! ஒரேநாளில் 124 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் உச்சத்தைத் தொட்டது கொரோனா! ஒரேநாளில் 124 பேர் உயிரிழப்பு!!

நாள் ஒன்றில் அதிகப்படியான கொவிட் மரணங்களாக நேற்றைய தினம் 124 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,464 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 2,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 341,982 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 300,406 ஆக அதிகரித்துள்ளது.

நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a comment