Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை!

இலங்கையில் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை!

நாட்டில் அடுத்த இரு வாரங்களில் கொவிட் நோயாளர்கள் மற்றும் இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாடு பேரழிவுக்குள் தள்ளப்படும் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, நிறுவனங்கள் அநாவசியமான ஊழியர்களை பணிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Leave a comment