Homeசெய்திகள்இலங்கை செய்திகள்நாட்டில் ஒரே நாளில் 111 பேர் கொரோனாவினால் மரணம்!

நாட்டில் ஒரே நாளில் 111 பேர் கொரோனாவினால் மரணம்!

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 111 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் 111 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 55 பெண்களும் 56 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 31 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 161 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 95 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை தவிர்த்து தற்போது 31 ஆயிரத்து 182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a comment