Homeசெய்திகள்இலங்கை செய்திகள்சிகிச்சையளிக்கும் பணியில் முப்படையினர் நியமிக்கப்படுவர்!!

சிகிச்சையளிக்கும் பணியில் முப்படையினர் நியமிக்கப்படுவர்!!

எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உதவியளிப்பதற்காக முப்படையினர், சுகாதார பிரிவில் ஓய்வுபெற்றுச் சென்ற அதிகாரிகள் மற்றும் தனியார் பிரிவில் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றாளர்களை அழைத்துச் செல்வதற்கு போதிய அம்பியுலன்ஸ் வசதிகள் இல்லையாயின் பிரதேச மட்டத்தில் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment