Homeசெய்திகள்இலங்கை செய்திகள்கொவிட் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

கொவிட் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

களுத்துறை பொது வைத்தியசாலை மற்றும் பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் நிரம்பிவழிந்த கொவிட் சடலங்களை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத சடலங்கள் காணப்பட்டதால் ஏனைய சடலங்களை வைத்திருப்பதில் இடநெருக்கடி ஏற்பட்டதாகவும் எனினும் தற்போது சடலங்களை தகனம் செவ்தற்கான தகனசாலைகள் 24 மணித்தியாலமும் இயங்கிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் 50க்கும் மேற்பட்ட சடலங்கள் குவிந்துக்கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்துகம, தொடங்கொட, அளுத்கம, பொதுவில, வஸ்கடுவ, ஹிமிதிரியாவ, களுத்துறை வடக்கு மற்றும் மினுவன்பிட்டிய ஆகிய பகுதிகளிலுள்ள தகனசாலைகளில் சடலங்கள் தகனம் செய்யபட்டு வருகின்றன.

Leave a comment