Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் 1,820 கொரோனா தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டனர்! இராணுவத் தளபதி!!

இலங்கையில் 1,820 கொரோனா தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டனர்! இராணுவத் தளபதி!!

நாட்டில், இன்று மாலை, மேலும் ஆயிரத்து 820 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இந்த தொற்றாளர்கள் அனைவரும், சித்திரைப் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை, 3 இலட்சத்து 26 ஆயிரத்து 043 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து, இன்று மேலும் 2 ஆயிரத்து 487 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 இலட்சத்து 90 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை, 4 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது.
அதனால், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களைத் தவிர்த்து, தற்பொழுது, 30 ஆயிரத்து 330 தொற்றாளர்கள், வைத்தியசாலைகள் மற்றும் கொரோனா சிகிச்சை நிலையங்களில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a comment