Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் 6 மாவட்டங்கள் கட்டுப்பாட்டை இழந்தது!!

இலங்கையில் 6 மாவட்டங்கள் கட்டுப்பாட்டை இழந்தது!!

நாட்டின் 6 மாவட்டங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை, வெகுவாக அதிகரித்துள்ளதென இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

குருநாகல், புத்தளம், கொழும்பு, காலி, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளிலுள்ள கட்டில்களை விடவும் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவிக்கின்றார்.

நாடு மிக மோசமான நிலைமையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அனைவரது கவனமும் திரும்ப வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment