Homeசெய்திகள்இலங்கை செய்திகள்ஹட்டனில் கொத்தலாவல சட்ட மூலத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

ஹட்டனில் கொத்தலாவல சட்ட மூலத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

கொத்தலாவல சட்ட மூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொத்தலாவல பிரேரணைக்கு எதிரான கூட்டு நிலைய செயற்பாட்டாளர்கள் ஹட்டனில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை நடத்தியுள்ளனர்.

கல்வியை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ள இராணுவ நிர்வாகத்தை நிறுத்து, இலவச கல்வியை ஒழிப்பதற்காகாக இராணுவ இயந்திரத்தை அமைத்து தற்காலிகமாக சுருட்டிக்கொண்ட கொத்தலாவல சட்டத்தை முழுமையாக எதிர்ப்போம் என கோரிக்கை விடுத்து இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் ஆசிரியர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என நூற்றுக்கு அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் தங்களது கோரிக்கைகளை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தி அதை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணி ஒன்றையும் முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் ஆகியவற்றை வெளிக்கொண்டுவந்தனர்.

 

Leave a comment