Homeசெய்திகள்இலங்கை செய்திகள்அவசர நிலைமையை பிரகடனப்படுத்தியது இரு வைத்தியசாலைகள் − ஆபத்தில் இலங்கை

அவசர நிலைமையை பிரகடனப்படுத்தியது இரு வைத்தியசாலைகள் − ஆபத்தில் இலங்கை

நாட்டில் அதிகரித்துள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக இரண்டு வைத்தியசாலைகளில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை மற்றும் காலி − கராபிட்டிய போதனா வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளிலேயே இவ்வாறு அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலைகளில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றாளர்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், பல வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக மேலதிக வாட்டுக்கள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், கட்டில்களுக்கு மேலதிகமாக நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் கூட, இலங்கை மருத்துவ கட்டமைப்பு இவ்வாறான சவால்களை எதிர்நோக்கவில்லை என கூறப்படுகின்றது.

நாட்டை சுனாமி தாக்கிய சந்தர்ப்பத்தில், வைத்தியசாலைகளில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், அந்த சந்தர்ப்பத்தில் நிலைமை விரைவில் வழமைக்கு கொண்டு வரப்பட்டது.

எனினும், தற்போது கொவிட் வைரஸ் பரவல் காரணமாக, இலங்கை மருத்துவத்துறை பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a comment