Homeசெய்திகள்இலங்கை செய்திகள்மரணமடைந்த வயோதிப தம்பதியினருக்கு கொரோனா!!

மரணமடைந்த வயோதிப தம்பதியினருக்கு கொரோனா!!

காலி நாகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் உயிரிழந்த தம்பதியினர் கொரோனா வைரஸ் தொற்றினாலேயே உயிரிழந்துள்ளனர் என்று கராப்பிட்டிய போதானா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நாகொடையைச் சேர்ந்த 73 வயது நபரும் அவரது 72 வயது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த வயோதிபர் 2ஆம் திகதி வீட்டில் மரணமடைந்த நிலையில் அவரது சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தமை தெரியவந்தள்ளது.

அதேபோன்று அவரது மனைவி நேற்று (3) அவரது வீட்டில் மரணமடைந்துள்ள நிலையில், அவரது சடலமும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த இருவரது சடலங்களும் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்படவுள்ளன.

Leave a comment