Homeசெய்திகள்இலங்கை செய்திகள்தொற்றாளர்களால் நிரம்பி வழிகிறது வைத்தியசாலைகள்! நாடாளுமன்றில் ரணில்!

தொற்றாளர்களால் நிரம்பி வழிகிறது வைத்தியசாலைகள்! நாடாளுமன்றில் ரணில்!

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதால், ஆலோசனைக் குழுவொன்றைக் கூட்டி முடிவெடுக்க முடியாதா என, நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.
‘கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதால் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொரோனாத் தொற்றாளர்கள் நிரம்பி வழிகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாகப் பல தொலைபேசி அழைப்புகள் நேற்று மாலை எனக்கு வந்தன.

எனவே இவ்விடயம் தொடர்பில் துறைசார்ந்த அமைச்சருக்கு அறிவுறுத்தி ஆலோசனைக் குழுவைக் கூட்டி வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க முடியாதா?’

இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, இவ்விடயத்தை சுகாதார அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று இன்று மாலைக்குள் இதற்கு தீர்வொன்றை பெற்றுத்தருகின்றோம் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment