Homeசெய்திகள்இலங்கை செய்திகள்ரிஷாட் பதியூதீனின் மனைவியிடம் சிறுமி மரணம் தொடர்பாக விசாரணை!!

ரிஷாட் பதியூதீனின் மனைவியிடம் சிறுமி மரணம் தொடர்பாக விசாரணை!!

பதினாறு வயது சிறுமியொருவர் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட மூன்று பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றது.

பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினி கடந்த 3ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் திகதி உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Leave a comment