Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கான தொழில் வழிகாட்டல்!!

இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கான தொழில் வழிகாட்டல்!!

இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கான தொழில் வழிகாட்டல்!!
இளைஞர்களின் திறன்களை ஊக்குவிப்பதற்கான தொழில் வழிகாட்டல் நிகழ்வு, 2021 ஆம் ஆண்டு திறன் அபிவிருத்தி தினத்தை முன்னிட்டு இலங்கை தொழில்பயிற்சி அதிகார சபையால் நேற்று யூலை 15 நடத்தப்பட்டது.

வவுனியா கண்டி வீதி மூன்று முறிப்பில் அமைந்துள்ள இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் உதவி பணிப்பாளர் இரா.அகிலன் தலைமையில் நடைபெற்றது.
இளைஞர்களின் திறன்களை ஊக்குவிப்பதற்கான தொனிப் பொருளாகக் கொண்ட இத்தினத்தில், தொழில் திறன் தொடர்பான விளக்கங்கள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உதவி பணிப்பாளர் உலகில் கொவைட் 19 வைரஸ் பெருந்தொற்று ஏற்பட்டு நாட்டை முடக்கியுள்ள போதிலும் இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையானது, இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு சமூக ஊடகங்களின் ஊடாக மாணவர்களுக்கு தேவையான போதனா முறை கற்கநெறிகளை வழங்குவதோடு அவர்களுக்கான பயிற்சிகளையும் வீடியோ தொழில் நுட்பத்தினூடாக வழங்கி வருகின்றது.

அத்துடன் வினைத்திறன் மிக்க இளைஞர்களை உருவாக்குவதன் ஊடாக சுபிட்சமான எதிர்காலமிக்க இலங்கையை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பயிற்சி உத்தியோகத்தர் RPDL. ராஜபக்ச, நிகழ்ச்சி திட்டமிடல் அதிகாரி வு.ரூபிகா மற்றும் நிதி உத்தியோகத்தர் சிறியானி அபயசிறிவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

 

Leave a comment