Homeசெய்திகள்உலக செய்திகள்இருவேறு தடுப்பூசிகளை ஒருவருக்கு கலந்து பயன்படுத்துவதால் ஆபத்து! உலக சுகாதார அமைப்பு!!

இருவேறு தடுப்பூசிகளை ஒருவருக்கு கலந்து பயன்படுத்துவதால் ஆபத்து! உலக சுகாதார அமைப்பு!!

டெல்டா வகை வைரஸ் திரிபு பாதிப்பு காரணமாக உலகளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏற்பட்டுள்ள தடுப்பூசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இருவேறு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தும் நிலை பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு இருவேறு தடுப்பூசிகளை ஒருவருக்கு கலந்து பயன்படுத்துவதால் ஆபத்து ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவிக்கையில்,
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக 2 தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது சரியான நடவடிக்கை அல்ல. இது குறித்து உலக சுகாதார அமைப்பு இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.
தற்போது காணப்படும் குழப்பமான நிலையில் 2 வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதை பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தும்.
உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பின்னரே வெவ்வெறு 2 தடுப்பூசிகளை பயன்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றார்.
உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் தெரிவிக்கையில்,
கொரோனாவுக்காக கொவிட் தடுப்பூசியின் 3 ஆவது செலுத்துகையை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கு தேவையான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை. அதற்கு பதிலாக செல்வந்த நாடுகள் தங்களிடம் எஞ்சியுள்ள தடுப்பூசிகளை வறிய நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.
உலகளாவிய ரீதியில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை கடந்த 10 வாரங்களாக குறைந்திருந்த நிலையில், டெல்டா திரிபு காரணமாக கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
எனவே தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் உலக சுகாதார அமைப்பின் கோவெக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Leave a comment