Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் இலவசமாக ஐவருக்கு கண் சத்திர சிகிச்சை!!

வவுனியாவில் இலவசமாக ஐவருக்கு கண் சத்திர சிகிச்சை!!

 

வவுனியாவில் இலவச கண் சத்திரசிகிச்சை வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள ஆனந்தி கண் மருத்தவ மனையில் இன்று (யூலை11) நடைபெற்றது.
புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பின் தலைவர் வேலாயுதம் சர்வேஸ்வரன் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து நோயாளிகளுக்கு கண் அறுவைச் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
இவ் கண் அறுவைச் சிகிச்சையை, கண் அறுவைச்சிகிச்சை நிபுணர் வைத்தியர் கிரிதரன் மேற்கொண்டிருந்தார்.
இலவச கண் சத்திரசிகிச்சை தொடர்பாக கருத்து தெரிவித்த, புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பின் தலைவர் வேலாயுதம் சர்வேஸ்வரன்,
வவுனியா மாவட்டம் மற்றும் அதனை சூழவுள்ள மாவட்டங்களிலுள்ள ஏழை மக்களுக்கு இனமத பேதமின்றி இலவச கண் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளவுள்ளோம். குறைந்தது இரண்டாயிரம் நோயாளிகளுக்கு சத்திரசிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
இலவச கண் சத்திரசிகிச்சைக்கான நிதியுதவியை இங்கிலாந்தின் சொலிகல் மாகாணத்தை சேர்ந்த பாடசாலை சமூகம் 52 கிலோமீற்றர் நடைபவனியாக சென்று பணம் சேகரித்து வழங்கியுள்ளனர்.
இலவச சத்திரசிகிச்சையின் முதல் கட்டமாக ஐந்து பேருக்கு இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Leave a comment