Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் கலாச்சாரங்கள் அழிக்கப்பட்டுவிடும்!இந்திய பிரதி உயர் ஸ்தானிகர்!

இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் கலாச்சாரங்கள் அழிக்கப்பட்டுவிடும்!இந்திய பிரதி உயர் ஸ்தானிகர்!

25 ஆண்டுகளில் இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் கலாச்சாரங்கள் அழிக்கப்பட்டுவிடும் என, இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் உள்ளிட்ட குழுவினர் இந்திய பிரதி உயர் ஸ்தானிகரை  நேரில் சந்தித்து கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெற்றது.இதில் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வன்னி மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு மீண்டும் இந்திய வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

மேலும், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வாழும் பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கான உதவியை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் வைத்தியசாலைக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பது தொடர்பிலும், இவற்றுக்கு இந்தியா பூரண ஆதரவளிப்பதாக இந்திய பிரதி உயர்ஸ்தானிகர், பிரபா கணேஷனிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனா இலங்கையில் ஆக்கிரமிப்பை முன்னெடுப்பதாக பிரதி உயர் ஸ்தானிகர் பிரபா கனேசனிடம் சுட்டிக்காட்டினார்.

இன்னும் 25 ஆண்டுகளில் இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழர்களின் கலாச்சாரங்கள் அழிக்கப்பட்டுவிடும் என இந்திய உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment