Homeசெய்திகள்இலங்கை செய்திகள்நாட்டில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்!!

நாட்டில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்!!

பாடசாலைகளை மீள திறப்பது குறித்த அறிவித்தல் ஒன்றை இன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் விடுத்துள்ளார்.

இதற்கமைய சுகாதாரத் துறையினரின் அனுமதியுடன், 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று (2) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பாடசாலைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a comment