Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் கசிப்பு காய்ச்சிய நபர்களை கைது செய்த அதிரடிப்படை!!

வவுனியாவில் கசிப்பு காய்ச்சிய நபர்களை கைது செய்த அதிரடிப்படை!!

வவுனியாவில் கசிப்பு காய்ச்சிய இரண்டு நபர்களையும், ஒரு பெரல் கசிப்பு கோடா மற்றும் உபகரணங்களையும் விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு யூன் 28 கைப்பற்றினர்.

வவுனியா பாலமோட்டை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெடுன்குளம் கிராமத்தில் வயல் பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு காய்ச்சுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர், இரண்டு நபர்களை கைது செய்தனர்.

கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக வைத்திருந்த ஒரு பெரல் கோடா மற்றும் உபகரணங்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பொருட்கள் பாலமோட்டை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a comment