Homeசெய்திகள்இந்திய செய்திகள்ஐஸ்கிறீம் விற்ற பெண் அதே ஊரில் காவல் துறை அதிகாரியாக பதவி ஏற்று சாதனை!!

ஐஸ்கிறீம் விற்ற பெண் அதே ஊரில் காவல் துறை அதிகாரியாக பதவி ஏற்று சாதனை!!

குடும்ப கஷ்டம் காரணமாக அன்று ஐஸ் கிரீம் விற்றப் பெண் இன்று அதே ஊரில் போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்று அசத்தியுள்ளார்.

அவரது சாதனைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆனி சிவா தன்னுடைய 18 வயதில் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் மண வாழ்க்கை கசப்பாக முடியும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. குழந்தைக்கு ஆறு மாதம் இருக்கும் போது கணவர் விட்டுப்பிரிந்து சென்றுவிட்டார்.

ஆனிக்கு பெற்றோர்கூட ஆதரவளிக்கவில்லை. ஆனால் அவரது பாட்டி விட்டுப்போன படிப்பை மீண்டும் தொடங்கி வைத்தார்.
கல்வி மட்டுமே ஆயுதமென்ற உறுதியுடன், முதுகலை வரை படித்தார் ஆனி சிவா.
பாட்டிக்கு சுமையாக இருக்கக்கூடாது என்று நினைத்த இவர் கேரளாவின் வர்கலா என்ற பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, லெமன் ஜூஸ் விற்பது – ஐஸ்க்ரீம் விற்பது போன்ற வேலைகள் செய்தார்.

ஆனி சிவா, தங்கியிருந்த பகுதியில் மசாலா பொருள்கள் விற்பனை மற்றும் சலவை சோப்பு விற்கும் ஏஜெண்ட் போன்ற சிறு சிறு வேலைகளையும் செய்துள்ளார்.


இந்த சூழலில் அவரை ஒருவர் போலீஸ் வேலைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தியிருக்கிறார். உடனடியாக அப்ளை செய்து, 2016இல் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர்ந்தார் ஆனி.
தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் உயர்வுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்து 3 வருட தொடர் முயற்சிக்குப்பின், அதில் தேர்வு பெற்றார்.

ஆனி சிவா 2019 இல் பயிற்சி காலத்தை தொடங்கிய அவர் பயிற்சி காலம் முடிந்த நிலையில், தான் மசாலா பொருட்களும் ஐஸ்க்ரீமும் லெமன் ஜூஸும் விற்ற அதே பகுதியில் சப்-இன்ஸ்பெக்டராக பதிவியேற்றுள்ளார்.

வர்கலா பகுதியில் தான் என்னுடைய சிறு குழந்தையுடன் நடு வீதியில் கண்ணீருடன் ஆதரவற்று நான் நின்றேன், ஆனால் இப்போது அதே ஊரில் பொறுப்பேற்று உள்ளேன் என அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

என்னுடைய கடந்த காலத்தை எதிர்த்து நின்று, அதனுடன் போராடி அதை நான் கடந்து வந்ததால்தான் இன்று என்னால் வெற்றியடைய முடிந்துள்ளது.

என்னைப்பார்த்து, யாரேனும் ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்றால், அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி எனக்கூறியுள்ளார்.

Leave a comment