Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கைக்கு புதிய மூன்று வகையான கொவிட் தடுப்பூசிகள் − அரசாங்கம் தெரிவிப்பு

இலங்கைக்கு புதிய மூன்று வகையான கொவிட் தடுப்பூசிகள் − அரசாங்கம் தெரிவிப்பு

இலங்கைக்குள் இதுவரை பயன்படுத்தாத 3 வகையான கொவிட் தடுப்பூசிகள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 3 வகையான தடுப்பூசிகளே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதன்படி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர், மோடானா மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவெக் ஆகிய மூன்று தடுப்பூசிகளே நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜுலை மாத இறுதிக்குள் நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே அரசின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

Leave a comment