Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியா நகரசபை பாதீட்டு நிதியில் வீதிகள் திருத்தம்!!

வவுனியா நகரசபை பாதீட்டு நிதியில் வீதிகள் திருத்தம்!!

வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனின், 2021 நகரசபை பாதீட்டு நிதியில் நகரசபை முதியோர் முற்ற வீதி கிரவலிட்டு தாரிடல் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா நகர சபையின் உறுப்பினரும், ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபனின், 2021ம் ஆண்டிற்கான நகரசபை பாதீட்டு நிதியில் குருமன்காடு நகரசபை விடுதியின் முதியோர் முற்ற வீதி 0.8மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கிரவலிட்டு தாரிடல் பணிகளின் ஆரம்ப வேலைத்திட்டமான கிரவலிடல் பணிகள் நேற்றைய தினம் (25) நடைபெற்றது.

இவ் பணிகளின் ஆரம்ப வேலைகளை நகர சபை உறுப்பினர் நேரடியாக சென்று பார்வையிட்டதுடன், முதியோர் முற்றம் இன்னும் மந்த கதியில் அபிவிருத்தி பணிகள் நடைபெறுவதை நகரசபை செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், நகர சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் சந்திரேஸ்வரன் ரவி அவர்களும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனால் கடந்த 2021- மாசி மாத நகரசபை அமர்வில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவாக, நகர சபை வேலைப் பகுதியினரினால் நகரசபை விடுதியின் பிரதான வீதி திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

Leave a comment