Homeசெய்திகள்இலங்கை செய்திகள்பயங்கரவாதிக்கு துணை போகும் செயற்பாட்டில் ஹக்கீம்! அமைச்சர் குற்றச்சாட்டு!

பயங்கரவாதிக்கு துணை போகும் செயற்பாட்டில் ஹக்கீம்! அமைச்சர் குற்றச்சாட்டு!

பயங்கரவாதிகளை காப்பாற்றும் நடவடிக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹகீம் முன்னெடுத்து வருகின்றார் எனவும், முற்றுமுழுதாக பயங்கரவாதிக்கு துணை போகும் போக்கில் ஹக்கீம் செயற்படுகின்றார் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை தண்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றது என்பதையே எதிர்க்கட்சி உறுப்பினர் ஹகீம் எப்போதும் கூறுவார்.
ஆனால் நாம் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தவறு செய்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தவுடன் பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தி தண்டிக்கிறோம் என குற்றம் சுமத்துகின்றீர்கள். கருதினாலிடம் சென்று வேறு ஒன்றை கூறுகின்றீர்கள்.

குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தவுடன் பயங்கரவாதிகளுக்காக நியாயம் பேசுகின்றீர்கள்.

எதிர்கட்சியும், ஹக்கீமும் பயங்கரவாதிகளுக்கு துணை நிற்கின்றனர். ரவூப் ஹகீம் மூலமாக அது தெளிவாக வெளிப்பட்டுவிட்டது.
எதிர்க்கட்சி தலைவர் இதனை ஏற்றுக்கொள்கின்றாரா? பயங்கரவாதிகளுக்கு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கற்பித்துள்ளார். அவருக்காக நீங்கள் துணை நிற்பது நியாயமா என்றார்.

Leave a comment